Monday, February 15, 2010

மனைவி!

அழகான கணவன்தான்
அரைகுறையாய் போய்விட்டான்
உடன்கட்டைதான் ஏரவில்லை
எரிந்து கொண்டுதான் இருக்கிறாள் இன்றும்!

-விஷ்ணு

Sunday, February 14, 2010

நானும் ஒரு நாத்திகன்!

நான் படைத்த உன்னை
என் பெயரை சொல்லியே அழிப்பது
நான் அல்ல
அது நீதான்!

என் பெயரையே
இரு புறமும் சொல்லி
கொல்லவும் சாகவும் செய்யும்
முட்டாள் மனிதா
இன்று நானே சொல்கின்றேன்
செவிதிறந்து கேட்டுக்கொள்
நீ தேடும் கடவுள் எங்குமில்லை!
இன்று முதல் நானும் ஒரு நாத்திகன்!

எந்த மிருகத்திற்குள்ளும்
மனிதன் இல்லை!
ஒரு மனிதனுக்குள்
எத்தனை மிருகங்கள்
எந்த மிருகத்திற்கும் இல்லாத
மதமும் உள் இருக்கின்றது!

மதங்களின் பெயரில்
மரித்துவிட்டு
என்னை பார்க்காதீற்கள்
பழிச்சொல்லாதீற்கள்!
நான் மனிதனைதான் படைத்தேன்
மதங்களை அல்ல!
உறக்க சொல்கின்றேன்
மாக்களே
செவிதிறந்து கேட்டுக்கொள்
இன்று முதல் நான் கடவுளே இல்லை!

கடவுள் இல்லாத மதம்
உனக்கு எதற்கு
இன்று முதல் நானும் ஒரு நாத்திகன்!

-விஷ்னு

Sunday, October 25, 2009

தேசப்பற்று!

சுதந்திர தினத்தன்று
கொடியாய் மார்பில்
பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும்!

மறுநாள் பெருக்குகையில்
குப்பையாய் மாறி
பறந்துவிடும்!

ஒருநாள் வாழ்ந்து அழியும்
விட்டில் பூச்சியாய்
தேசப்பற்று!

-விஷ்ணு

Wednesday, September 23, 2009

நாம்!

நான்!
என் வீடு!
என் வீதி!
இதனைதாண்டி யோசிக்க
என் சிந்தனை அத்தனை பெரிதல்ல!

என் காதுகளுக்கு
வெடிச்சத்தம் கேள்காதவரை
தீவிரவாதி அவனை
எனக்கு பயமில்லை!

என் கிணற்றுநீர்
கலங்காதவரை
தொழிற்சாலை கலிவுநீர்
எனக்கு ஒரு பொருட்டில்லை!

என் தோட்டத்தில்
மரம் எதற்கு
வெப்பம் கூட நுழையாத
என் வீட்டில்
நிழல் எதற்கு!
அணிலும் காக்கையும் திண்ணும்
கனியெதற்க்கு!
இயற்கையும் தேவையில்லை எனக்கு!

கறைப்பட்ட அரசியல்வாதியை
தேர்ந்துயெடுக்க
என் விரலில் நான்
கறையிட மாட்டேன்!

நான் உன்னையும்
நீ என்னையும்
நீ என்றுதான் அழைப்போம்!
நாம் என்று எத்தனைமுறை அழைத்தோம்!
எப்போது அழைப்போம்!

நம் சுயநலத்தில்
பொதுநலம் கலக்கவேண்டிய
நேரம் இது!

நம் வீதியை தாண்டிய
வாழ்கையை பார்க்கவும்
நம் பேரனை தாண்டிய
தலைமுறை பார்க்கவும் வேண்டும் இனி!

இல்லையில்!வரண்ட பூமியில்
விதைவிதைத்து மழைகாய்
காத்துயிருக்கும் விவசாயியுடன்
ஒரு நாள் நீயும் நானும்!

-விஷ்ணு

Saturday, September 19, 2009

விறகு!!!

கடைசியாய் இவள்
விறகுவிற்க்கவும் புறப்பட்டுவிட்டாள்
சமையல் அறையில்
விறகு மட்டுமே இருப்பதை
பார்த்துவிட்டு!

Saturday, September 12, 2009

அம்மா

வெளிநாடு செல்கின்றேன் நான்!
நீ என்னை வழியனுப்புகின்றாய்
கண்ணீர் தடுத்து
விழிதைத்து அனுப்புகின்றாய்!

தனியாய் போகின்றேன் நான்
என் கண்களுக்கு தனிமையில்
நிற்பது நீதான்!

தைரியம் நடித்து
என்னை வழியனுப்ப வந்தாய்
இரண்டடி நடந்து நான் திரும்பிபார்க்கையில்
வேஷம் கலைகின்றாய்!

உன் உரக்கம் தொலைத்து
என்னை கனவாய் வளர்த்தாய்
இன்று என் கனவை வளர்க்க
வழியனுப்புகின்றாய்!

நான் அறிவேன்!
உன் சுறுசுறுப்பான விடியலும்,
சாயங்கால அரட்டையும்,
திபாவளியும்,பொங்கலும்,
நீ என்னோடு வழியனுப்புகின்றாய்!
போய்வருகின்றேன்!

-விஷ்ணு

சக்கரவர்த்தி நான்!

கல்லூரியில் முதல்நாள்
உன் முதல்பார்வை
என் முதல்காதல்
கண்டதும் காதலன கொச்சைபடுத்த வேண்டாம்!
அவள் பார்வை என் காதலின் பிள்ளையார்சுழி!

என் பகல் உன் பார்வைக்காய்
காத்துக்கிடகின்றன!
என் இரவு மறுநாள் விடியலுக்காய்
உறக்கம் தொலைக்கின்றன!

என் இதயம் உதிரத்தோடு
உன் உணர்வுகளையும் கலந்து
என் உடலெங்கும் சுழற்றுகின்றது.

என் உதிரம் அது
ஏயும் பியும் மட்டுமல்ல நீயும்தான்!

என்முகம் உன் மூளைக்குகூட எட்டுவதில்லை
என் ஆறாம் அறிவோ
உன்னை தவிர வேறு எதையும் தேடுவதில்லை!

வருடங்கள் தவம் செய்துவிட்டு
வரம் கேட்க மறந்த பக்தன் நான்!

என்செய்ய வரத்தைவிட சுகமானது
இந்த கலையாத தவம்!

இறுதியில் நீ போய்வருகின்றேன் என்றதே
பொய் என்று அறியாமல்
சந்தோஷப்படுகின்றது மனது!

அறியாமலே நீ என்மீது
போர்தொடுத்தாய்
ஆனால் நான்தானே சிறைபிடித்தேன்
உன்னை என்மனதில்!

இனிமுதல் கைதிக்கு சேவைசெய்யும்
முதல் சக்கரவர்த்தி நான்!


_விஷ்ணு